வாழ்ந்துக்கொண்டிருக்கும் உண்மையான சித்தர் ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது?

என்னுடைய அன்பிற்குரிய சீரடி சாய்பாபா அவர்களுக்கு இந்த இணையதளத்தை சமர்ப்பிக்கிறேன்.

என்னுடைய அன்பிற்குரிய சீரடி சாய்பாபா அவர்களுக்கு இந்த இணையதளத்தை சமர்ப்பிக்கிறேன்.

 • ஒரு சித்தரை தேடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தேடுபவர்கள்,  தங்களுடைய சிறு ஞானத்தை வைத்து, சித்தருடைய ஞானத்தை உரசி, சோதித்து பார்த்து சித்தரை தேர்வு செய்கிறார்கள்.
 • அது எவ்வளவு பெரிய தவறு என்று, ஒரு உண்மையான சித்தரை சந்தித்த பிறகு தான், நான் தெரிந்து கொண்டேன்.
 • அது எவ்வாறெனில், ஒரு சித்தரை, அவர் உண்மையான சித்தர்தான் என்று, ஞானத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது.
 • இங்கு பல்கலைக்கழக பேராசிரியரின் அறிவை,  ஒரு ஐந்தாவது படிக்கும் மாணவனின் அறிவைக்கொண்டு சோதித்து பார்க்க முடியுமா? அதுபோல ஐந்தாவது படிக்கும் பையனின் அறிவைப் போல இருக்கும் ஒருவருடைய ஞானத்தை வைத்து, முழுமையான ஞானமுள்ள ஒரு சித்தரை, சோதித்து பார்த்து அவர் உண்மையான சித்தர் என்று கண்டுபிடிக்க முடியுமா?
 • இன்று உலகத்தில் உள்ள பெரும்பாலோர் இந்த தவறைத்தான் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
 • அரைகுறையாக சிறிது ஞானத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் எதை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ அது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.
 • நானும் அவ்வாறு அடம்பிடிக்கும் கூட்டத்தில் தான் இருந்தேன். 
 •  கடவுளுடைய அருளால் ஒரு உண்மையான சித்தரை சந்தித்த பிறகு தான், என்னுடைய ஞானத்தை வைத்து சித்தரை தேடியது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கே தெரிய வந்தது.
 • உண்மையில் ஒரு சித்தரை நம்முடைய ஞானத்தை வைத்து உரசி பார்த்து, அவர் உண்மையான சித்தர்தானா என்று கண்டுபிடிக்கவே முடியாது. 
 •  ஒருவருக்கு சித்தரை கண்டுபிடிக்கிற அளவிற்கு ஞானம் இருந்தால் அவருக்கு ஒரு குருவே தேவை இல்லை என்று என் குரு சொல்வார்.  இது எனக்கு நியாயமாக பட்டது. 
 • நம்முடைய ஞானத்தை வைத்து ஒரு சித்தரை கண்டுபிடிக்க கூடாது. ஏனெனில், அவர் சொல்லும் ஞானம் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம், அல்லது உண்மையான சித்தரிடமிருந்து திருடப்பட்ட ஞானமாகவும் இருக்கலாம். 
 • ஒருவர், சித்தர் நிலையை அடையாமலேயே, தன்னை சித்தர் எனக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னை சித்தர் என்று சொல்லும் ஒருவரை, அவர் உண்மையான சித்தர்தானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை என்னுடைய குரு எனக்கு அளித்திருக்கிறார்.
 • நீங்களும் ஒரு உண்மையான சித்தரை எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் மேற்கொண்டு படிக்கவும்.
 • ஒருவர், சித்தர் நிலையை அடையாமலேயே, தன்னை சித்தர் எனக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னை சித்தர் என்று சொல்லும் ஒருவரை, அவர் உண்மையான சித்தர்தானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை என்னுடைய குரு எனக்கு அளித்திருக்கிறார்.

 

 • நீங்களும் ஒரு உண்மையான சித்தரை எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் மேற்கொண்டு படிக்கவும்.

வாழ்ந்துக்கொண்டிருக்கும் உண்மையான சித்தர் ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது?

வாழ்ந்துக்கொண்டிருக்கும் உண்மையான சித்தர் ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது?

ஒரு சித்தரை தேடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு தேடுபவர்கள்,  தங்களுடைய சிறு ஞானத்தை வைத்து, சித்தருடைய ஞானத்தை உரசி, சோதித்து பார்த்து சித்தரை தேர்வு செய்கிறார்கள்.

 

 • அது எவ்வளவு பெரிய தவறு என்று, ஒரு உண்மையான சித்தரை சந்தித்த பிறகு தான், நான் தெரிந்து கொண்டேன்.

 

 • அது எவ்வாறெனில், ஒரு சித்தரை, அவர் உண்மையான சித்தர்தான் என்று, ஞானத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது.

 

 • இங்கு பல்கலைக்கழக பேராசிரியரின் அறிவை,  ஒரு ஐந்தாவது படிக்கும் மாணவனின் அறிவைக்கொண்டு சோதித்து பார்க்க முடியுமா? அதுபோல ஐந்தாவது படிக்கும் பையனின் அறிவைப் போல இருக்கும் ஒருவருடைய ஞானத்தை வைத்து, முழுமையான ஞானமுள்ள ஒரு சித்தரை, சோதித்து பார்த்து அவர் உண்மையான சித்தர் என்று கண்டுபிடிக்க முடியுமா?

 

 • இன்று உலகத்தில் உள்ள பெரும்பாலோர் இந்த தவறைத்தான் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

 • அரைகுறையாக சிறிது ஞானத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் எதை உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களோ அது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள்.

 

 • நானும் அவ்வாறு அடம்பிடிக்கும் கூட்டத்தில் தான் இருந்தேன். 

 

கடவுளுடைய அருளால் ஒரு உண்மையான சித்தரை சந்தித்த பிறகு தான், என்னுடைய ஞானத்தை வைத்து சித்தரை தேடியது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கே தெரிய வந்தது.

 • உண்மையில் ஒரு சித்தரை நம்முடைய ஞானத்தை வைத்து உரசி பார்த்து, அவர் உண்மையான சித்தர்தானா என்று கண்டுபிடிக்கவே முடியாது. 

 

 • ஒருவருக்கு சித்தரை கண்டுபிடிக்கிற அளவிற்கு ஞானம் இருந்தால் அவருக்கு ஒரு குருவே தேவை இல்லை என்று என் குரு சொல்வார்.  இது எனக்கு நியாயமாக பட்டது. 

 

 • நம்முடைய ஞானத்தை வைத்து ஒரு சித்தரை கண்டுபிடிக்க கூடாது. ஏனெனில், அவர் சொல்லும் ஞானம் உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம், அல்லது உண்மையான சித்தரிடமிருந்து திருடப்பட்ட ஞானமாகவும் இருக்கலாம். 
 • ஒருவர், சித்தர் நிலையை அடையாமலேயே, தன்னை சித்தர் எனக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னை சித்தர் என்று சொல்லும் ஒருவரை, அவர் உண்மையான சித்தர்தானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை என்னுடைய குரு எனக்கு அளித்திருக்கிறார்.

 

 • நீங்களும் ஒரு உண்மையான சித்தரை எப்படி கண்டுபிடிப்பது என்ற ஞானத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் மேற்கொண்டு படிக்கவும்

என்னுடைய அன்பிற்குரிய சீரடி சாய்பாபா அவர்களுக்கு இந்த இணையதளத்தை சமர்ப்பிக்கிறேன்.

மனித ஆத்மாவின் உயர்ந்த நிலையாகிய சித்தர் நிலையை அடையாமலேயே தம்மை ஒரு சித்தர் – ஞானி – யோகி – ரிஷி – துறவி – சுவாமிஜி – ஆன்மீக ஆசான்– ஆன்மீக குரு – ஆன்மீக தத்துவ ஞானி – மகான்- ஆன்மீக வழிகாட்டி – சாது – புனிதர் என்று சொல்லிக்கொள்ளும் இந்த காலகட்டத்தில் இறைவனுடன் தொடர்பில் இருக்கும் ஒரு உண்மையான வாழ்ந்துக் கொண்டிருக்கும் சித்தரை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

 • என்னுடைய இளம் வயது முதலே சீரடி சாய்பாபா மீது மிகுந்த பற்றுடையவனாக இருந்து வருகிறேன்.
 • ஆத்ம ஷாந்தி (இந்த நிலையை முக்தி, வீடு பேறு, நெய் நிலை என்று பலவாறு அழைக்கப்படுகிறது)  நிலையை அடைய உயிரோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரின் வழிகாட்டுதல்  அவசியம்” என்று வேதங்கள் கூறுவதால், சீரடி சாய்பாபா போன்று ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரை நான் 15 வருடங்காலமாக மனதார தேடிக்கொண்டிருந்தேன்.
 • ஆனால் சீரடி சாய்பாபா போன்ற ஒரு உண்மையான மகானை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. 
 • இறுதியாக ஷீரடி சாய்பாபாவிடமே இதயபூர்வமாக அழுது, அவரை போலவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு உண்மையான சித்தரை காண்பித்து, எனக்கு வழிகாட்ட பிராத்தனை செய்தேன்.
 • ஒரு நாள் இன்ப அதிர்ச்சி தரும்விதமாக, சீரடி சாய்பாபா என் கனவில் தோன்றி ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரையும், அவர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இடத்தையும் காண்பித்து, அவரை சென்று சந்திக்குமாறு கூறினார். 
 • உடனடியாக நான் அந்த சித்தரை சென்று சந்தித்து, அவரிடம்,  “கடவுளின் கிருபையாக எனது கனவில் சீரடி சாய்பாபாவால் தங்களை சந்திக்க வழிகாட்ட பெற்றேன்” , எனக் கூறினேன்.
 • அப்போது சித்தர்  என்னிடம்,  “இறை காதலர்களுக்காக, இறைவனால் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட மிக உயர்ந்த சித்தர்தான் சீரடி சாய்பாபா” எனக் கூறினார்.
 • வேதங்களிலும், மற்ற நம்பத்தகுந்த ஆதாரங்களிலும் உள்ள அத்தாட்சிகள் மூலமாக, தான் ஒரு உண்மையான சித்தர் (புனிதர், மகான், ஆன்மீக குரு) என நிரூபித்தார். எனவே நான் முழுமனதுடன், அவரை என்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டேன்
 • அவர் எனக்கு ஒரு உண்மையான வாழும் சித்தரை கண்டறியும் ஞானத்தையும் வழங்கினார்.
 • ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரை காண விரும்புபவர்களுக்கு, என்னுடைய குருபெருமான் மூலம் பெற்ற இந்த ஞானத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

கடவுள் பற்றி (ஆதி மகா தெய்வ சக்தி)

 • ஆதி மகா தெய்வ சக்தி என்ற ஒன்று இல்லையென்றால் படைப்புகள் என்ற ஒன்று இல்லவே இல்லை.
 • படைப்புகள் என்ற ஒன்று இருக்கிறது என்றால், பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாகிய இந்த பிரபஞ்சம் உருவாக காரணமாக இருந்த ஆதி மூலசக்தி என்ற ஒன்று நிச்சயம் இருக்கவேண்டும்.
 • அந்த ஆதிமகா தெய்வ சக்தியே பொதுவாக கடவுள், இறைவன், ஆதிபராசக்தி, அல்லாஹ், யெஹோவா, பரலோக தந்தை என்று பலவாறு அழைக்கப்படுகிறது.
 • கண்களின் மூலமாக மட்டுமே ஒளியை காண முடியும், காதுகளின் மூலமாக மட்டுமே ஒலியை கேட்க முடியும்.
 • கண்களால் ஒலியை கேட்க இயலாது என்ற காரணத்தால் “என்னால் ஒலியை கேட்க இயலவில்லை, அதனால் ஒலி என்ற ஒன்று இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று கண்கள் சொல்லமுடியுமா?
 • அதேபோல் காதால் ஒளியை பார்க்க முடியவில்லை என்ற காரணத்தால், “என்னால் ஒளியை பார்க்க இயலவில்லை, அதனால் ஒளி என்ற ஒன்று இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று காது சொல்ல முடியுமா? 
 • அதேபோல், மனிதனால் தனது ஆறாவது அறிவைக் கொண்டு கடவுளை உணரமுடியவில்லை என்ற காரணத்திற்காக, கடவுளே இல்லை என்று சொல்லக்கூடாது.
 • எப்படி இறைவன், கண்களை பார்ப்பதற்காகவும், காதுகளை கேட்பதற்காவும் படைத்திருக்கிறானோ. அதேபோல், தன்னை உணர்வதற்காகவே ஏழாவது அறிவையும் படைத்திருக்கிறான்.
 • எனவே, கடவுளின் உண்மையான தன்மையை, ஏழாவது அறிவைக்கொண்டு மட்டுமே உணரவும், அனுபவிக்கவும் முடியும்.
 • அவ்வாறு கடவுளின் உண்மையான தன்மையை ஏழாவது அறிவின் மூலமாக உணர்ந்தவர்களையே, நாம் சித்தர்கள், ஆன்மீக குரு, ஆன்மீக வழிகாட்டி, ஆன்மீக ஆசான், மகான், ஞானி, புனிதர் என்று பலவாறு அழைக்கிறோம்.
 • மின்விளக்கு ஒளிர்வதைக் கொண்டும், மின்விசிறி சுற்றுவதைக் கொண்டும், எவ்வாறு நாம் மின்சாரத்தை மறைமுகமாக உணருகிறோமோ, அதேபோலத்தான், ஒரு மனிதன் தனது ஏழாவது அறிவு திறக்கப்பட்டு அதன் மூலமாக நேரடியாக இறைவனை உணரும் வரை, கடவுள் சக்தி இருப்பதை மறைமுக சாட்சிகளால் மட்டுமே உணர முயற்சி செய்யவேண்டும்.

 

விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகள் சம்மந்தமான பல விஷயங்கள், மெய்ஞானிகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டிருப்பது, கடவுள் சக்தி இருக்கிறது என்பதற்கு மறைமுக சான்றுகளாக திகழ்கிறது.

மனிதனைப் பற்றி

 • உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், உச்சகட்ட பரிணாம நிலையை அடைந்த இனம், மனித இனமே என்று விஞ்ஞானம் பதிவு செய்துள்ளது,
 •  இதே போன்றுதான், இறைவனை புரிந்துகொள்ளக் கூடிய திறமையை, இறைவன் மனிதனுக்கு மட்டுமே கொடுத்துள்ளான் என்று வேதம் கூறுகிறது. 
 • அதனால் தான், கடவுளால் படைக்கப்பட்ட எல்லா படைப்புகளிலும், மனித இனம் மட்டுமே பரிணாம வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்த படைப்பு என்று அங்கீகரிக்கப்படுகிறது. 
 • மேலும், மனித ஆத்மா, ஷாந்தி நிலையை அடையும் வரை தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் என்று வேதங்கள் கூறுகிறது.
 • இந்த செயலையே வேதங்கள், “ஆத்ம பரிணாம வளர்ச்சி” (ஆன்மீக வளர்ச்சி) என்று பகருகிறது

மனித ஆத்மாக்கள், ஆத்ம பரிணாம வளர்ச்சி பயணத்தின் படி நான்கு வகைகளாக பிரிக்கப்படுகின்றனர். ஆத்மாவின் முதல்நிலை பால் நிலை என்றும், இரண்டாம் நிலை தயிர் நிலை என்றும் மூன்றாம் நிலை வெண்ணெய் நிலை என்றும், நான்காம் நிலை நெய் நிலை என்றும் அழைக்கப்படுகிறது

முதல்நிலை பால்

இரண்டாம் நிலை தயிர்

மூன்றாம் நிலை வெண்ணெய்

நான்காம் நிலை நெய்

 • நெய் நிலையில் மட்டுமே ஏழாவது அறிவு முழுமையாக திறக்கப்படும் என்று வேதங்கள் குறிப்பிடுகிறது.
 • இந்த நிலை, மூன்றாம் கண் திறக்கப்பட்ட நிலை என்றும் அழைக்கப்படுகிறது.
 • மேலும் இந்த மூன்றாம் கண் திறக்கப்பட்ட நிலையையே, தமிழ் இலக்கியங்களில் நெற்றிக்கண், ஞானக்கண், அகக்கண் என்றும் பலவாறு சொல்லப்படுகிறது. 
 • நெய் நிலையை அடைந்த ஆத்மா மட்டுமே அனைத்து பற்றுதல்களிலிருந்தும் விடுதலை அடைந்து, ஆதி மகா சக்தியை, உள்ளது உள்ளபடி உணர்ந்து ஷாந்தி நிலையை அடைகிறது என்று வேதங்கள் கூறுகிறது.
 • வேதங்களின் படி, மனித பிறப்பின் இறுதி  நோக்கமானது, ஆத்ம ஷாந்தி நிலையை அடைவது தான்.
 • மனித ஆத்மா, இறைவன் அருளால் இந்த நெய் நிலையை அடைந்த பிறகே பூரண ஷாந்தியை அடைந்து, எல்லா பற்றுதலிருந்து விடுபட்டு,  நிரந்தர பேரின்ப நிலையை அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறது.
 • இந்த நிலையே வீடுபேறு நிலை, மோட்சநிலை, முக்தி நிலை, விடுதலை பேரின்பபெருநிலை என்று தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

உயிரோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு ஆன்மீக குருவின் அவசியம் பற்றி பகவத் கீதையின் மூலமாக இறைவன் கூறும் வசனம்

கீதை 4:34

“ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சி செய். அவருக்குத் தொண்டு செய்து அவரிடம் அடக்கமாகக் கேள்விகள் கேட்டு ஆய்வு செய். உண்மையைக் கண்டவரான தன்னுணர்வு பெற்றோர் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.”

ஆன்மீக குருவைப்பற்றி

 • இறைவனுடைய அருளால் நெய் நிலையை அடைந்த ஆத்மாவை, ஷாந்தி நிலை அடைந்த ஆத்மா என்று வேதங்கள் அழைக்கிறது.
 • யாறொருவர், இந்த நிலையை அடைந்துள்ளாரோ அவர், சித்தர், ஆன்மீக குரு, ஆன்மீக தத்துவ ஞானி, மகான், ஆன்மீக வழிகாட்டி, புனிதர், இறைதூதர், அவதார புருஷர், ஆன்மீக ஆசான் என பலவாறு அழைக்கப்படுகிறார்.
 • ஒரு மனிதன் ஆத்ம ஷாந்தி அடைவதற்கு, இத்தகு  பூரணமான  ஆத்மஷாந்தி நிலையை (முக்தி நிலை) அடைந்த ஒரு உண்மையான ஆன்மீக குரு (சித்தர்) அவசியம் தேவை என்று வேதங்கள் தெள்ளத்தெளிவாக சொல்கிறது.
 • ஒரு உண்மையான ஆன்மீக குருவால் (சித்தர், மகான்) உன்னை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு, வேறு யாராலும் புரிந்துக்கொள்ள இயலாது. மேலும் அவரால் மட்டுமே ஆத்ம ஷாந்தியை (முக்தி) அடைய நேரான வழிகாட்ட முடியும். 
 • ஆகவே தான் குருவருள் இன்றி திருவருள் இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆன்மீக குருவின் (சித்தர்) தேடல் குறித்த என்னுடைய அனுபவம்

கடந்த காலத்தில் வாழ்ந்த சீரடி சாய்பாபா போன்ற ஒரு உண்மையான சித்தரை மனதார நேசித்து பின்பற்றினால், அவர் உங்களுக்கு நிச்சயமாக தற்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தர் ஒருவரை சந்திக்க வழிகாட்டுவார்.

 • உண்மையாதெனில், ஒரு வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரின் வழிகாட்டுதல் மூலமாக மட்டுமே உங்களுடைய ஆத்மா, முக்தி நிலைக்கு (நெய்நிலை, ஆத்ம ஷாந்தி நிலை) மாற்றமடைய இயலும். 
 • ஆகவேதான் ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் நெய்நிலையை அடைந்த ஆன்மீக குரு மூலமாக மட்டுமே, மனிதனால், ஆத்ம ஷாந்தியை அடைய முடியும் என்று வேதங்கள் தெளிவாக உரைக்கின்றது.
 • ஆனால் இன்றோ பலர், நெய்நிலையை அடையாமலேயே தங்களைத்தாங்களே சித்தர், மகான், ஆன்மீக குரு, ஆன்மீக வழிகாட்டி, ஆன்மீக ஆசான் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
 • இவ்வாறு சொல்லிக்கொள்ளும் பலரை நான் சந்தித்துத்துள்ளேன். 
 • இப்படிப்பட்டவர்களிடம், தாங்கள் நெய்நிலையை அடைந்தவர் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று கேட்டபோது, அவர்களால் நெய்நிலை அடைந்ததை நிரூபிக்கமுடியவில்லை.
 • நான், சுமார் 15 வருடகாலமாக ஒரு உண்மையான, வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரை தேடினேன்.
 
 • சீரடி சாய்பாபாவிடம் அர்ப்பணிப்புள்ள ஒரு சீடனாக இருந்ததால், இறுதியில், சீரடி சாய்பாபாவிடமே மனதார அழுது, அவரைப்போலவே ஒரு உண்மையான வாழுந்துக்கொண்டிருக்கும்  சித்தரை எனக்கு காண்பிக்குமாறு வேண்டினேன் 
 • சீரடி சாய்பாபா என் கனவில் தோன்றி, ஒரு உண்மையான சித்தரையும், அவர் வாழுந்துக்கொண்டிருக்கும் இடத்தையும் எனக்கு  காண்பித்து என் பிரார்த்தனைக்கு பதிலளித்தார் 
 • அவதாரபுருஷர் சீரடி சாய்பாபா எனக்கு கனவில் காண்பித்த, வாழ்ந்துக்கொண்டிருக்கும் அந்த உண்மையான சித்தரை இறைவனின் கருணையால் நான் நேரில் சந்தித்தேன். 
 • அவர் வேதங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு தன்னுடைய ஆத்மா நெய் நிலையை அடைந்துள்ளதை எனக்கு தெளிவாக நிரூபித்தார்.
 • வேதங்கள் மூலமாகவும், மற்ற நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலமாகவும் அவர் காண்பித்த அத்தாட்சிகளை நம்பி, கீதை 4:34 இல் குறிப்பிட்டுள்ளது போல், இதயப்பூர்வமாக அவரை என்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டு அவர் வழிகாட்டுதல் படி வாழ்ந்து வருகிறேன்.
 • மேலும் அவர் ஒரு உண்மையான சித்தரை கண்டறியும் ஞானத்தையும் எனக்கு கற்றுக்கொடுத்தார்.

இறைவனோடு தொடர்பில் இருக்கக்கூடிய ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரை (ஆன்மீக குரு) எப்படி கண்டறிவது?

 • தன்னை ஒரு டாக்டர் அல்லது ஒரு பொறியாளர் எனக் கூறும் ஒரு நபரை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பட்டம் மூலம் சரிபார்த்து உறுதிசெய்து கொள்ளலாம்.
 • தன்னை ஒரு அரசாங்க அதிகாரி எனக்கூறும் ஒரு நபரை அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு அவரை அரசாங்க அதிகாரி என்று கண்டுகொள்ளமுடியும்.
 • அதேபோல, தன்னை ஒரு சித்தர் (ஆன்மீக குரு) எனக் கூறும் ஒருவர், கடவுள் தரப்பிலிருந்து உறுதியான ஆதாரங்களின் மூலம், தன்னை ஒரு சித்தர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
 • வேதங்களின் கூற்றுப்படி, யாறொருவர் எப்பொழுதும் கடவுளின் தொடர்பில் இருக்கிறாரோ, மேலும் கடவுளிடமிருந்து ஞான ஒளியை பெற்றுக்கொண்டிருக்கிறாரோ, அவரே சித்தர் என்று அழைக்கப்படுகிறார் 

அவ்வாறு தன்னை சித்தர் என கூறும் ஒருவர், உண்மையாகவே கடவுளிடம் தொடர்பில் இருக்கிறாரா என்பதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?

 • உண்மையான சித்தரை கண்டறியும் ஞானத்தை, யாறொருவர், இதயப்பூர்வமாக முக்தி (ஆத்ம ஷாந்தி) அடையவேண்டும் என்ற விருப்பத்தோடு வரும் தகுதியுடையவர்களுக்கே, என்னுடைய குரு வெளிப்படுத்துவார்.
 • வேதங்களில் ஒளிந்துள்ள இந்த மிக உயர்ந்த, ஞானத்தை நீங்கள் அறிந்தால் மிகவும் ஆச்சர்யம் அடைவீர்கள்.
 • வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த கலியுக காலகட்டத்தில், பல்வேறு போலி சாமியார்கள் ( போலி குருமார்கள்) மற்றும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் அளிக்கப்படும் ஞானத்தால், நம்மை சுலபமாக குழப்பி வழிகெடுத்து விடுகிறார்கள்.
 • ஒரு உண்மையான சித்தரின் மூலமாகத்தான் முக்தி அடைய முடியும் என்று வேதங்கள் கூறுவதால், இந்த தனித்துவமான, ஒரு உண்மையான சித்தரை கண்டுபிடிக்கும் ஞானம் ( உலகத்தில் வேற எங்ககும் இல்லாத ), ஒரு உண்மையான சித்தரை கண்டறிய உங்களுக்கு உதவும்.
 • என்னுடைய குரு, வேதங்களின் அத்தாட்சிகள் மூலமாக , தானும் ஒரு உண்மையான சித்தர் என்பதை தங்களுக்கு நிரூபிப்பார்.
 • மேலும் அவர், முக்தி நிலை அடைய வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்களுக்கு, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மனிதனின் இறுதி நோக்கமாகிய ஆத்ம ஷாந்தி அடைய நேரான வழியையும் போதிப்பார்.

என்னுடைய குருவின் சில உபதேசங்கள்


இன்றைய காலக்கட்டத்தில், ஆன்மீகம் என்ற பெயரில் வியாபாரம் தான் எங்கும் நடந்து வருகிறது என்பது நாம் அறிந்ததே. இந்த வணிகமயமான உலகத்தில், என்னுடைய குரு பணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, ஒருவரின் குணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்.

ஆகவே, என்னுடைய குருவை நேரில் சந்திக்க, அவர் எந்தவித கட்டணமும் விதிப்பதில்லை.


முழுமனதோடு ஆத்ம ஷாந்தி நிலையை அடைய வேண்டும் என்பதற்காக ஒரு உண்மையான வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தரை சந்திக்க வேண்டும் என்று ஏங்கும் நல்ல உள்ளங்களுக்கு இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தங்களுக்கு, என்னுடைய அன்பிற்குரிய சீரடி சாய்பாபா அறிமுகப்படுத்திய என்னுடைய குருவை காண ஆர்வம் இருப்பின் பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.  மேலே உள்ள படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்க முடியாவிட்டால், கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து மேலே உள்ள விவரங்களை அனுப்பவும்

  அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  இக்காலகட்டத்தில் பல போலி குருமார்கள் தங்களை கடவுள் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு மனிதன், ஆத்ம ஷாந்தி அடைந்த ஒரு உண்மையான குருவின் வழிகாட்டுதலின் மூலமாக மட்டுமே ஆத்ம ஷாந்தி அடைய முடியும்.  இந்த ஞானம், மக்கள் போலி குருமார்களிடம் ஏமாறாமல் இருக்க பெரிதும் உதவும்

  ஆம், இரண்டும் ஒன்று தான்.  இதனை வீடுபேறு, ஆத்ம விடுதலை என்று பலவாறு கூறுவர்.  இவ்வனைத்து வார்த்தைகளும் ஆத்மாவின் இறுதி இலக்கையே குறிக்கும்.

  பகவத் கீதை, ஒரு வாழ்ந்துக் கொண்டிருக்கும் குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாக வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது.  வாழ்ந்துக் கொண்டிருக்கும் சித்தர் மட்டுமே முக்தி அடைய தேவையான கட்டளைகளை கொடுக்க முடியும்.  முன்பு வாழ்ந்த சித்தர்களை பூஜிப்பதில் எந்த தவறும் இல்லை.  மேலும், நீங்கள் அவர்களை உண்மையாக மனதார நேசித்து வந்தால் அந்த சித்தர்களே உங்களை வாழ்ந்துக் கொண்டிருக்கும் சித்தரை அடைய வழிகாட்டுவார்கள்.  ஷீரடி சாய்பாபா எனக்கு வழிகாட்டியது போன்று.

  ஒரு சித்தர் கடவுளால் எல்லா மனித ஆத்மாக்களுக்காக அனுப்பப்பட்டவர்.  ஆதலால், எல்லா மனிதர்களும் விண்ணப்பிக்கலாம்